இலங்கையில் இன்று போராட்டம்! கலவரமாக காணப்படும் பகுதிகள்!

0
265
Struggle today in Sri Lanka! Areas that are seen as a riot!
Struggle today in Sri Lanka! Areas that are seen as a riot!

இலங்கையில் இன்று போராட்டம்! கலவரமாக காணப்படும் பகுதிகள்!

கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது.

மேலும் அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக இந்தியா கூறியது.அதன்படி, 40 டன் டீசல், 11 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தது.அதனால்  ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள் அதிபர், பிரதமர். நிதியமைச்சர் என அனைத்து 66 ராஜபக்சேக்களையும் பதவி விலக வலியுறுத்தி தெருவில் இறங்கி போராடினார்கள். அதனை அடுத்து அவர் பதவி விலகினார்.

மேலும் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ரணில் விக்ரமசிங்கே பதவியேற்று  இரண்டு மாதங்கள் கூட முழுமையாக ஆகாத நிலையில் இலங்கையின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது. அதனால் இப்பொழுது, தனியார் வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் உள்ள சிர­மம் ஏற்ப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் மிதிவண்டியை பயன்படுத்துகின்றார்கள். இந்த சைக்கிள்களை திருடும் பணியிலும் சில ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இதனால் அந்நாட்டில் தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன மற்றும் மக்களின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. பொருளாதாரத்தை சீர் செய்வதில் அதிபர் கோத்த பையா ராஜபக்சவும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் தோல்வி அடைந்துவிட்டதாக  எதிர்க்கட்சிகளும் விவாதித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் எரிவாயு ஆகியவை கிடைத்தாலும் அத்தியாவசிய பொருட்களும்  மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாலும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக தலைநகரான கொழும்பில் பொதுமக்கள் இன்று அதிபர் மாளிகை அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

Previous article7 மாத குறை பிரசவத்தில் பிறந்த ஆண் சிசு! கழிவறைக்குள் தூக்கி வீசி சென்ற அவலம்!
Next articleசேலத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் வாக்காளர்கள்!!