தினமும் மலச்சிக்கலுடன் போராட்டமா? இதற்கு நிரந்தர தீர்வு இந்த பொருள் மட்டுமே!!

0
462

பெரும்பாலான நபர்கள் மலச்சிக்கல் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.ஒவ்வொரு நாளும் காலையில் மலத்தை வெளியேற்றுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் நாம் கடைபிடிக்கும் உணவுமுறைகள் தான்.நார்ச்சத்து குறைந்த உணவுகள் அதிகளவு உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

அது மட்டுமின்றி போதுமான தண்ணீர் பருகாமை,நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு எளிதில் மலச்சிக்கல் ஏற்படுகிறது.இதை சரி செய்ய ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓட்ஸ் – 50 கிராம்
2)சீரகம் – ஒரு ஸ்பூன்
3)உப்பு – தேவைக்கேற்ப
4)வெந்தயப் பொடி – கால் ஸ்பூன்
5)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் 50 கிராம் அளவு ஓட்ஸை வாணலியில் போட்டு லேசாக வறுத்து ஆறவிடவும்.பிறகு அந்த வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் சீரகம் சேர்த்து பொரியவிட வேண்டும்.

அடுத்து வறுத்து வைத்துள்ள ஓட்ஸை போட்டு கிளறிவிட வேண்டும்.பின்னர் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

ஓட்ஸ் நன்கு குலைந்து வந்ததும் வெந்தயப் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்துவிடவும்.இதை ஓட்ஸை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் முழுமையாக நீங்கும்.

ஓட்ஸில் உள்ள வைட்டமின்கள்,ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் உடலில் நார்ச்சத்து அதிகரித்து மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.

அதேபோல் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் பருகினால் தேங்கிய மலம் இறுகி வெளியேறிவிடும்.எலுமிச்சை சாறை இந்த சூடான நீரில் கலந்து பருகினாலும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

Previous articleவீட்டு பூஜை அறையில் செய்யக் கூடாத தவறுகள்!! அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleஉயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!