500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார் ஸ்டூவர்ட் பிராட் 

0
144
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின்  ஸ்டூவர்ட் பிராட்  முதல் இன்னிங்சில் 31 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்க்சில் 36 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார். ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். ஏற்கனவே ஜேம்ஸ் ஆண்டர்சன் 500 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது ஸ்டூவர்ட் பிராட் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 129 டெஸ்டில் இந்த சாதனையை எட்டிய நிலையில் ஸ்டூவர்ட் பிராட் 140 போட்டியில் எட்டியுள்ளார்.

Previous articleகொரோனாவில் இருந்து மீண்ட ஆக்சன் கிங் இன் மகள்!
Next articleஊழல் வழக்கு! முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை.