cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டியில் திணறிய பேட்ஸ்மேன்கள்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது 4 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆகாஷ் தீப் பவுண்டரி மூலம் ஃபாலோ ஆனை தவிர்த்தது. இந்நிலையில் சோர்ந்து திணறிய ஆஸ்திரேலியா பவுலர்கள்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் 2 போட்டிகள் நடந்து முடிந்தது. இதில் இரு அணிகளும் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் பிரிஸ்போனில் கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி இந்த தொடரில் உள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் 54/4 என்ற நிலையில் இருந்தது. இதில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக வெளியேறினார்.
இதனால் ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் தொடர்ந்து ஓவர்களை வீசும் கட்டாயம் ஏற்பட்டது. இதனால் இருவரும் மிகவும் சோர்வடைந்தனர் மேலும் மழை காரணமாக நினைத்தது போல் இந்திய வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.