7ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

Photo of author

By Parthipan K

7ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்தே கொன்று இருக்கிறார்.

பள்ளியில் மாணவர்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்களும், பாலியல் வன் கொடுமைகளும் இன்றளவும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒரு சிறுவனை ஆசிரியர் ஒருவர் அடித்தே கொன்று இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், இவருடைய 13 வயது மகன் தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளான்.

தன்னை ஒரு ஆசிரியர் அடிக்கடி அடிப்பதாக தந்தையிடம் புகார் கூறி உள்ளான், ஆனால் ஓம் பிரகாஷ் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் அந்த சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று, ஆசிரியர் மனோஜ் குமார் அந்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார், இதனால் மாணவன் அசைவின்றி மயங்கி உள்ளான்.

உடனே மனோஜ்குமார், ஓம்பிரகாஷ் க்கு கால் செய்து கூறி இருக்கிறார், மேலும் அந்த சிறுவன் இறந்தது போல் நடிப்பதாக கூறி இருக்கிறார்.

ஓம்பிரகாஷ் வந்து பார்த்த போது சிறுவன் உண்மையிலேயே இறந்தது கண்டு கதறி அழுது இருக்கிறார். மேலும் ஆசிரியர் மனோஜ் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.