தமிழகத்தில் நீட் தேர்வால் மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை : அரியலூரில் பரபரப்பு

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் நீட் தேர்வால் மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை : அரியலூரில் பரபரப்பு

Parthipan K

தமிழகத்தில் நீட் தேர்வால் மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை : அரியலூரில் பரபரப்பு

கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஜேஇஇ மற்றும் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் ,மத்திய அரசு ஏற்க மறுத்து, குறித்த தேதியில் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.

அதன்படி ஜேஇஇ தேர்வுகள் நடைபெற்று வருகிறது .வருகின்ற 13-ஆம் தேதி நீட்தேர்வு இந்திய நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது .இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். ஆனால் நீட் தேர்வு குறித்து அச்சம் ஏற்பட்டதால் , விக்னேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகி அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் ,தற்போது எடுத்த விபரீத முடிவு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.