வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி !!

Photo of author

By Parthipan K

தர்மபுரி அருகே வயிற்றுவலி காரணமாக பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தின் அருகில் உள்ள பெரிய பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த துரை என்பவரின், மகள் கீர்த்தி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வருவது வழக்கமாக ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் , நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த நிலையில், கீர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் வேதனை தாங்க முடியாமல் சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பணி முடிந்து வீடு திரும்பிய தாயார், தனது மகள் தூக்கிட்டு தொங்கியபடி இருந்த நிலையைக் கண்டு கதறி அழுதனர். இந்த செயல் காரிமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.