ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
215
Student dies in Srivenkateswara trap in college! A lot of excitement in the area!
Student dies in Srivenkateswara trap in college! A lot of excitement in the area!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார்(20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வகுப்பறைக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். இந்நிலையில்  அவருடைய தயார் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை.

அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் கல்லூரி விடுதியின் வார்டனை தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கல்லூரி வார்டன் விடுதிக்கு சென்று பார்த்தபோது விஷ்ணுகுமார் தங்கி இருந்த அறை உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. மேலும் வார்டன் கல்லூரி நிர்வாகம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஷ்ணுகுமார் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விஷ்ணுகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் விஷ்ணுகுமாரின் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleகவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!..பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி!!
Next articleநீயே மகனாக பிறக்கணும் மாமா! உருகிய புகழ்!