கருப்பு உருவத்தால் தற்கொலைக்கு முயன்றேன் பள்ளி மாணவி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துகுடி மாவட்டம், சாயர்புரத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவரை அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்து பள்ளிகளுக்கு செல்ல கூறியுள்ளனர். அதனால், அவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று விளையாடி கொண்டிருந்த மாணவி திடீரென முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இரு கால்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் தந்தை அளித்த தகவல் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது.
அந்த மாணவி கடந்த ஒரு மாதமாக தன்னை ஏதோ ஒரு கருப்பு உருவம் பின்தொடர்வதாக கூறியுள்ளார். ஆனால், அவரை சுற்றி யாருமே இல்லை என கூறினார். இதனையடுத்து, மாணவியிடம் காவல்துறையினரை விசாரித்தனர். அப்போது மாணவி தெரிவிக்கையில், அன்று அந்த கருப்பு உருவம் விளையாடி கொண்டிருந்த உருவம் தன்னை விளையாட அழைத்ததாக கூறினார்.
அதனை தொடர்ந்து அந்த உருவம் தன்னை முதல் மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து குதித்து விளையாடலாம் என கூறியதாகவும் அதனை நம்பி தான் குதித்த பின் மேலே பார்த்தால் அந்த உருவம் கீழே குதிக்காமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.
விசாரணையில் போது காவல்துறையினரிடம் அந்த உருவம் ஜன்னல் பக்கம் இருந்து தன்னை அழைப்பதாக கூறி காவல்துறையினரையே பீதியில் ஆழ்தினார்.இந்த சம்பவம் குறித்து தற்கொலைக்கு முயன்றாதாக கூறி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மாணவிக்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் தர ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.