கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Photo of author

By Janani

கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Janani

பாலியல் ஊக்க மருந்து சாப்பிட்டு விட்டு மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றில் சில கொடூர சம்பவங்கள் நம்மை அதிர்வலைகளை ஏற்படுத்தும் அப்படி ஒரு சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜ்கவுதம் என்ற இளைஞர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்துள்ளார். பாலியல் ஊக்க மாத்திரை உண்ட அவர் அந்த பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அவர் மயக்கமடைந்ததும் அவரை அப்படியே விட்டு விட்டு தப்பியோடியுள்ளார். வெளியில் சென்ற அந்த மாணவியின் சகோதரி வீட்டிற்கு வந்து பார்க்கும் போது அவர் பிறப்புறுப்பில் ரத்தபோக்குடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மாணவியியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிரேதபரிசோதனை அறிக்கையில், பாலியல் வன்கொடுமையின் போது அளவுக்கு அதிகமாக ஏற்பட்ட உதிரபோக்கால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த ராஜ் கவுதை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.