12ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் பெற்ற மாணவி!மார்க் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை!
தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் பெண்கள் தான் அதிக மதிப்பெண் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் மூத்த மகள் காவியா (18) இவர் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்ற பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார் இருப்பினும் மதிப்பெண் குறைவாக பெற்றுள்ளதாகவும் இருந்த கவலையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது காவியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் வெகுநேரமாகியும் காவியா வெளியே வராத காரணத்தால் உள்ளே சென்று பார்த்தபோது காவியா தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
ஆத்தூர் ஊரக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் காவியாவின் வீட்டிற்கு வந்து காவியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் தன்னுடன் படித்த சக மாணவர்களை காட்டிலும் காவியா குறைவாக மதிப்பெண் பெற்றதாகவும், உயர்கல்வியில் அவர் எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேர்வதற்கு இந்த மதிப்பெண் பத்தாத காரணத்தினாலும், மேலும் குடும்பத்தினர் ஏதாவது கூறினார்களா என்று சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.