இன்று பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்!! நீதி கிடைக்குமா?

Photo of author

By Vinoth

இன்று பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்!! நீதி கிடைக்குமா?

Vinoth

Students are protesting in many colleges today!! Will there be justice?

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநில முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கு மேற்ப்பட்டோர் கல்லூரி நூலைவாயில் இன்று கண்டனம் கோசங்களை எழுப்பினர். மேலும் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நூலைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடலூர் தேவராம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியின் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நந்தனம் கலைக் கல்லூரி வளாகத்தில் இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.