மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

Photo of author

By Kowsalya

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

Kowsalya

மாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி பிறகு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப்படும் என  அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் அனைத்தும் முடங்கிப் போன நிலையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போது தேர்வுகளை ரத்து செய்து அவ்வப்போது இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வந்த தமிழக அரசு இப்போது இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்  கே .பி அன்பழகன் கூறியதாவது, இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு தேர்வுகள் தொடங்கப்படும் என்றும், மாணவர்கள் தேர்வுகளை நேரடியாக வந்து எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் படி அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த அறிவிப்பை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.