மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளியை சுத்தம்படுத்தும் பணிகள் அனைத்து மாநிலங்களிலும் தீவீரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் ஆரளம் என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நவம்பர் ஒன்று முதல் கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனால் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அவ்வாறு தூய்மைபடுத்தும் பொழுது மாணவிகளின் கழிவறையை சுத்தப்படுத்தினார்.அப்பொழுது மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையில் தவிடு வைத்திருந்த வாளியின் உள்ளே தேங்காய் போன்ற ஏதேனும் ஒரு பொருள் தென்பட்டது. முதலில் அந்த தூய்மைப் பணியாளர் அது தேங்காய் என நினைத்து பின் அது வித்தியாசமாக இருந்ததை கண்டு சுதாகரித்து கொண்டார்.பின்பு பள்ளியின் சமையல்காரரை அழைத்து காண்பித்துள்ளார். சமையல்காரர் நாராயணன் என்பவர் அந்த வாளியில் இருந்து வெடிகுண்டை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். இருவருக்கும் அப்பொருள் ஏதோ வித்தியாசமாக இருக்கின்றது என்பதை உணர்ந்து பள்ளியில் இருந்த ஆசிரியர்களிடம் முறையிட்டனர்.
பின்பு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறையினருக்கு இதுகுறித்து தெரிவித்தார். அதனையடுத்து உதவி ஆய்வாளர் வி வி ஷிஜேஸ் அவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் அது சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டு என்பதை கூறினார். அதனை பிறகு உடனடியாக கல்லூரில் உள்ள வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வெடிகுண்டுகளை , அந்த பகுதிக்கும் அருகில் உள்ள செம்மண் குவாரிக்கு எடுத்துச் சென்றனர்.பின்பு வெடிகுண்டு நிபுணர்கள் அந்த நாட்டு வெடிகுண்டை செயலிழக்க செய்தனர். அதனையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கழிவறையின் பின்புறமுள்ள சுவரில் கால்தடங்கள் இருப்பதை கண்டனர். மர்ம நபர்கள் யாரேனும் சுவர் ஏறி குதித்து வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து சென்றிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.இச்சம்பவத்தால் அப்பள்ளி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.