மாணவர்களே வங்கி கணக்கை செக் பண்ணிக்கோங்க.. வரப்போகும் ரூ 1000!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழக அரசானது உயர்கல்வி செல்லும் மாணவர்களின் படிப்பிற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கி வருகிறது. முதலில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்த அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி கல்வி உதவித் தொகையாக வழங்கபடும் என உத்தரவிட்டனர். இது அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இதே போல மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கொண்டு வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இதற்கு ஆதார் அட்டை வங்கி கணக்கு என அனைத்தும் கட்டாயம் என கூறிய நிலையில் இந்த ஆவணங்கள் அனைத்தும் பள்ளிகளில் சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டிருந்தது.
இதற்கான பணிகளானது வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் புதல்வன் திட்டம் மூலம் வரும் 15 ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறிய நிலையில் இதற்குரிய வேலைகள் அனைத்தும் நாளை மறுநாள் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்தவகையில் முதல் கட்டமாக பள்ளிகளில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணி தொடங்கும் என்று கூறியுள்ளனர்.