மாணவர்கள் பள்ளி மீது கொடுத்த புகார்! உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர்!
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளிக்கு 500 மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. தற்போது பள்ளியில் 200 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றன.
இந்நிலையில் அப்பள்ளியே சேர்ந்த 25க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். எங்கள் பள்ளியில் குடிநீர் மற்றும் எந்த அடிப்படை வசதி எதுவுமில்லை. மாணவ மாணவிகளுக்கு எந்த அடிப்படை வசதி இல்லாததால் இயற்கை உபாதை கூட கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றோம். பள்ளியில் படிப்தற்கு போதிய ஆசிரியர்கள் இல்லை.
இது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு தெரிவித்தனர். இதையடுத்து மாணவ மாணவிகள் புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உடனடியாக லால்குடி அடுத்துள்ள கீழ் அன்பில் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு பயின்று வரும் மாணவ மாணவிகளிடமும் அவர்களது தேவையை குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு பணிபுரிந்து வரும் ஆசிரியரிடமும் மாணவ மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர். அப்பள்ளிமாணவ மாணவிகள் கொடுத்த புகரை புகழுக்கு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
இது குறித்து மாணவ மாணவிகளுக்கு தேவையான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவ, மாணவிகளின் புகாருக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கு மாணவ மாணவிகள் மற்றும் கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.