காவல்துறை விசாரணைக்கு சென்ற மாணவன் சடலமாக மீட்பு !!

Photo of author

By Parthipan K

காவல்துறையினர் விசாரணைக்கு சென்ற மாணவனை தூக்கிட்ட நிலையில் ,சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் ரமேஷ் என்பவரின் அண்ணன் 17 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்ய அழைத்து வந்துள்ளார்.பெண் மைனர் என்பதால் பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணனை கைது செய்வதற்கு பதிலாக தம்பி ரமேஷ் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞன் ரமேஷ் சடலமாக மரத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்தது ,அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை முடிந்ததும் ரமேஷ் என்பவரை வீட்டிற்கு அனுப்பி விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள், விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் ரமேஷரை அடித்துக் கொன்றதாக புகார் தெரிவித்தனர். மேலும்,இதற்கு நியாயம் கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.