11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!!
பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒட்டுமொத்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடங்களுடன் தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வில் 8,32,000 பேர் எழுதுகின்றனர். ஒட்டுமொத்தமாக 3016 தேர்வு மையங்கள் சரியான விதிமுறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வுகளில் முறைகேடுகள் நடவாமல் இருக்க 4000 பறக்கும்படையினர், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் சிறப்பு தனிப்படை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைக்குள் செல்போன் மற்றும் தேர்வுக்கு சம்பந்தமில்லாத பொருட்கள் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுத்தேர்வில் பிட் அடிப்பது, மற்ற மாணவர்கள் எழுதிய விடைத்தாளை மாற்றிக் கொள்வது மற்றும் பிற தேர்வு அறைக்கு ஒழுக்கமில்லாத செயல்களை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 24 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்று,
மே மாதம் 14 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.