இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா நடக்கவிருக்கும் 5 போட்டிகளில் 2 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் இந்திய அணியில் அடுத்த சச்சின் என ஒரு காலத்தில் பேசப்பட்டவர் சுப்மன் கில் ஆனால் இப்போது அணியில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். அவரை அனைத்து பார்மெட்டிலும் கேப்டனாக உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டு வந்தது ஆனால் அவர் அதன் பின் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளார்.
மேலும் தற்போது 30 மேற்பட்ட போட்டிகளில் விளையாடி ஒரு ஆட்டநாயகன் விருதை கூட பெறாமல் இருக்கிறார். அதிக போட்டிகளில் விளையாடி ஒரு ஆட்டநாயகன் விருது கூட பெறாதவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் சுப்மன் கில்.
இவருக்கு முன் முதலிடத்தில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் 36 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளார்,இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் புஜாரா இவர் 35 போட்டிகளில் விளையாடி விருது பெறவில்லை. 3 வதாக நியூசிலாந்து டாம் பிளெண்டல் இவர் 34 போட்டிகளில் விளையாடி விருது பெறவில்லை. சுப்மன் கில் 30 போட்டிகளாக விருது பெறாமல் இருக்கிறார்.