அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்! ஆபத்தின் அறிகுறியா?

Photo of author

By Kowsalya

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்! ஆபத்தின் அறிகுறியா?

Kowsalya

அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஷிருயி பகுதியில் காலை 1.22 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதுபோல் அருணாச்சல பிரதேசத்தில் பான்கேயின் என்ற பகுதியிலும் காலை 1.02 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த தகவலை தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது.

இரு வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் ஒருவித அச்சத்துடன் காணப்படுகின்றனர். தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கம் பேர் ஆபத்தின் அறிகுறியாக இருக்குமா என்று மக்களின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அசாம் மற்றும் மணிபூர் மற்றும் மேகாலயா என வட மாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.