தூய்மை பணியாளர்களுக்கு மானிய உதவித்தொகை!! அரசு கொடுத்த இன்ப செய்தி!!
தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் வீடு இல்லாத 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசானது ரூ.55 கோடி மதிப்பில் வீடு கட்டி தர மானியம் வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் இணைந்த சட்ட பேரவையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டுத்தொடர் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 500 உறுப்பினர்களுக்கு நகர்புற வழிபாடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது.
சமீபத்தில் கூட அரசானது அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது.அதன் பின் உயர் சிகிச்சை தேவை படுபவர்களுக்கு மருத்துவமனைகளில் சிக்கிச்சை மேற்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
அரசானது பல்வேறு நல திட்டங்களை அவர்களுக்கு செய்து வருகின்ற நிலையில் புதிதாக இந்த திட்டத்தையும் செய்யல் படுத்த உள்ளது.
இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பதிவு செய்துள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் வீடுகள் வாங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முதற்கட்டமாக 7 தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் ஆணைகளை வழங்கி இந்த பணியை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த உறுபினர்களுக்கு மட்டுமல்லாமல் உறுப்பினர் சாராதவர்களுக்கு கல்வி உதவி தொகை ,திருமண உதவி தொகை ,முதியோர் ஓய்வூதியம் ,மகப்பேறு உதவித்தொகை ,இயற்கை மரண உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகை வழங்கப்படுவது குறிபிடத்தக்கது.