குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மானியம்!!

Photo of author

By Savitha

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மானியம்!!

Savitha

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மானியம்!!

2015 முதல் 2022 ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகப் பொறுப்பும் சமுதாய விழிப்புணர்ச்சியும் மிக்க திரைப்படங்களை தரமாகவும், சிறிய முதலீட்டிலும் தயாரித்து வெளியீடுபவரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழுவின் வாயிலாக குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்படும் தரமான தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் 7 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

2015 முதல் 2022 ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.