பெண்கள் சுயதொழில் புரிய வழங்கப்படும் மானியம்!! தமிழக அரசின் சிறப்பு திட்டம்!!

Photo of author

By Gayathri

பெண்கள் சுயதொழில் புரிய வழங்கப்படும் மானியம்!! தமிழக அரசின் சிறப்பு திட்டம்!!

Gayathri

Subsidy given to women for self-employment!! Tamil Nadu Government Special Scheme!!

தமிழகத்தில் உள்ள கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வயது முதிர் பெண்கள் போன்றவர்களுக்கு தமிழக அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர்களுக்கு சுய தொழில் புரிவதற்கான மானியம் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான தகுதிகள் :-

✓ நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்.

✓ வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை.

✓ குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000 ஆக இருந்தல் வேண்டும்.

✓ ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர்கள்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் :-

✓ தங்களுடைய நிலை குறித்த சுயசான்று
✓ வருமானச் சான்று
✓ குடும்ப அட்டை நகல்
✓ ஆதார் அட்டை நகல்
✓ வசிப்பிட முகவரிக்கான சான்று
✓ பெண் தொழில் முனைவோர் அல்லது பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்களின் விண்ணப்பத்தினையும் சேர்த்தல் அவசியம்.