தமிழ் சினிமாவில் பாடலால் வெற்றி பெற்ற படங்கள் பல 100 இருப்பினும் ஒரு பாடல் கூட இடம்பெறாமல் வெற்றி பெற்ற படங்களின் தொகுப்பை இந்த பதிவில் காண்போம்.
பின்னணி இசை கூட இல்லாத திரைப்படங்களின் வரிசை :-
✓ அந்த நாள் :-
கே பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழ் சினிமா துறையில் உருவான முதல் பாடல் எல்லா திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1954 ஆம் ஆண்டு வெளியானது.
✓ ஒரு வீடு இரு வாசல்
1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இதுவும் இயக்குனர் பாலச்சந்தரால் இயற்றப்பட்ட திரைப்படம் ஆகும்.
✓ வீடு :-
1988 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா அவர்களால் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
✓ ஏர்போர்ட் :-
1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜோஷி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ் அவர்கள் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
✓ ஹவுஸ் ஃபுல் :-
1999 ஆம் ஆண்டு துறைக்கு வந்த இத்திரைப்படமானது பார்த்திபன் இயக்கத்தில் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றது.
✓ உன்னை போல் ஒருவன் :-
2009 ஆம் ஆண்டு கமலஹாசன் மற்றும் மோகன்லால் நடித்து திரையிடப்பட்ட திரைப்படம். மேலும் இது தேசிய அளவில் வெளியிடப்பட்ட திரைப்படம்.
✓ ஆரண்ய காண்டம் :-
2011 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா என்னும் இயக்குனரால் இயக்கப்பட்டு திரையிடப்பட்டது. மேலும் இதுவே இவருடைய முதல் படமாகும்.
✓ பயணம் :-
இந்த திரைப்படமும் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியிடப்பட்டது.
✓ விசாரணை :-
இந்தத் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெற்றிமாறன் அவர்களால் இயக்கப்பட்ட திரைப்படமாகும். இந்தத் திரைப்படமும் பல விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
✓ குற்றமே தண்டனை :-
2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குநர் மணிகண்டன். எம் ஆவார். இத்திரைப்படத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
✓ கைதி :-
2019 ஆம் ஆண்டில் வெளியான கைதி திரைப்படமானது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஆகும்.