Beauty Tips

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி!

வசூல் சாதனை செய்த விஜயின் வாரிசு! படம் ரிலீஸ்க்கு முன்பே 180 கோடி!

வம்சி இயக்கத்தின் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே வசூல் சாதனை படைத்துள்ளது. தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், தற்போதைய 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த படத்திற்கான தொலைக்காட்சி உரிமம், பாடல் உரிமம் ,ஓடிடி உரிமம் என அனைத்து உரிமைகளுக்கும் விஜயின் வாரிசு படம் 180 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இதில் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய் கொடுத்து பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Comment