சென்னை வந்த பிரதமர் மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பா!
பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார்.விமான நிலையத்தில் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட பிரதமர் இன்று காலை 10.35 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
இதையடுத்து ஐ.என்.எஸ்.அடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடியார் மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் வரவேற்க திட்டமிட்டுள்ளனர்.அதன் பிறகு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவிருக்கிறார்.இந்த வருகையின் போது ரூபாய் 4,487 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும் ரூ 3,640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கே நகருக்கான மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார்.மேலும் சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையேயான நான்காவது ரயில் சேவையையும் தொடக்கி வைக்கவுள்ளார்.இந்திய தொழிநுட்ப டிஸ்கவரி வளாகத்துக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.
கல்லணை கால்வாய் சீரமைப்பு புதுப்பித்தல் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சென்னை நகர் முழுவதும் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.விழா நடைபெற இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கமும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.