கோவையில் 20 வயது இளைஞன் தற்கொலை? நான் சுஷாந்த் பாய் கிட்ட போறேன் என்று கடிதம்

Photo of author

By Pavithra

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சமீபத்தில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருவர் இதுவரை தற்கொலை செய்து கொண்டனர்.

மேலும் தற்போது இன்று கோவையில் ஒருவர்”நான் சுஷாந்த் பாய் கிட்ட போறேன்” என்று ஹிந்தியில் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவர் வடமாநிலதை தொழிலாளி ஆவார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் இவர் கணபதி தாஸ் (வயது 20 ). இவர் கோவை வரைட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் அவர் மதிய உணவிற்காக தனது அறைக்கு சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் அவர் நண்பர்கள் அவருடை அறைக்கு சென்று பார்த்தனர்.கதவுகள் சாத்தியிருந்த நிலையில் அவருடைய நண்பர்கள் தட்டிப் பார்த்தும் அவர் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு நைலான் கயிறு ஒன்றால் கணபதி தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த அறையில் “நான் சுஷாந்த் சிங் பாய் கிட்ட போறேன்” என்று இந்தியில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் எடுத்துள்ளனர். இதுகுறித்து அவரது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வரைட்டி ஹால் ரோடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் இளைஞர் தற்கொலை கொண்டது ராஜ்புத் தற்கொலையின் மன அழுத்தத்தினாலா?அல்லது இவரது தற்கொலைக்கு வேறு ஏதவாத காரணம் இருக்குமா? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.