கல்வி அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருத்துவ படிப்பிற்கு வந்த நியூ அப்டேட்!
நமது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வருடம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த நீட் தேர்வானது மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் நுழைவுத் தேர்வாக எழுதுவர்.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு படிப்பதற்கு செல்ல முடியும். கொரோனா தொற்றின் காரணத்தினால் தேர்வானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஒரு பக்கம் தேர்வு நடக்கக் கூடாது என்று பல எதிர்ப்புகள் நடந்து வந்தது.ஸ்டாலின் அவர்கள் பதவி அமர்ந்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை காணச் சென்றார் அப்போது மேகதாது அணை கட்டுதல் பற்றியும் நீட் தேர்வை ரத்து செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் மத்திய அரசோ இதுபற்றி எந்தவித முடிவுகளையும் எடுக்கவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இளங்கலை நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி என அறிவிப்பு வெளிவந்தது. நீர் தேர்வானது ஆரம்பிப்பதற்கு முன்னே தேர்விற்கும் விண்ணப்பம் செய்யும் நாளுக்கும் 60 நாட்கள் இடைவெளி காணப்படும். அந்த இடைவெளியானது தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு மையங்களை அமைக்கவும் மற்றும் தேர்வு அறைகளை வரிசைப்படுத்தவும் அந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்வர்.
தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் சிறிது மாதம் நீட் தேர்வை தள்ளி வைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு இணங்க நீட் தேர்வின் தேதி ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து மத்திய கல்வி அமைச்சர் கூறியதாவது, இந்த வருடத்திற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் எனக் கூறினார்.
தேர்வில் பங்கேற்க ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 5 மணிக்கு துவங்கும் என்றும் கூறினார். மேலும் அவர் கூறியதாவது, கொரோனா தொற்று காரணமாக சென்ற வருடம் அமைந்ததை விட இந்த வருடம் அதிகப்படியான தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அதுமட்டுமின்றி தேர்வு எழுத வரும் மாணவர்கள் நெரிசல் ஏற்படாத வகையில் மற்றும் கூட்டம் கூட முடியாத வகையிலும் முன்னேற்பாடுகள் செய்யப்படும். தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவருக்கும் சானிடைசர் மற்றும் முக கவசம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இத்தேர்வு முடிவுகள் சென்றவருடம் போலவே ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் கூறினார்.