சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி திடீர் மரணம்! காவல்துறையினர் அதிரடி விசாரணை!

Photo of author

By Sakthi

திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2வது தளத்தில் நேற்று பயணி ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக தகவலறிந்து வந்த எண்ணூர் காவல்துறையினர் பயணியின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அதோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த சமயத்தில் அவர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இறங்கி நடந்து வந்தபோது திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் திருவொற்றியூர் கலைஞர் நகரை சார்ந்த முகமது என்பதும் நுங்கம்பாக்கத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

அதோடு நேற்று வேலை முடிவடைந்து மெட்ரோ ரயிலில் விம்கோ நகர் வந்து இறங்கி வீட்டுக்கு செல்லும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. அதோடு இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.