பிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

Photo of author

By Sakthi

பிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரமேம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இனி சினிமாவில் படங்கள் இயக்கப்போவது இல்லை என்று கூறி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து விட்டு சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார். எனினும் அவருடைய இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் நிதின் பாலி, நடிகை நஸ்ரியா நடிப்பில் உருவான நேரம் படத்தை இயக்கியதன் மூலமாக மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் அல்போன்ஸ் புத்ரன் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் மீண்டும் நடிகர் நிவின் பாலி அவர்களை வைத்து பிரேமம் என்ற திரைப்படபத்தை எடுத்தார். பிரேமம் படம் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் அவர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு நிவின் பாலி நடிப்பில் அவியல், பிருத்விராஜ் நடிப்பில் கோல்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். தற்போது நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக அறிமுகம் ஆகும் கிப்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தியேட்டருக்கான சினிமா படங்களை இயக்கப்போவது இல்லை என்று அல்போன்ஸ் புத்ரன் அவர்கள் பதிவு ஒன்றை பேஸ்ட் செய்தார். சிறிது நேரத்திலேயே அந்த பதிவை நீக்கினார். இருந்தும் இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த பதிவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் “நான் திரையரங்குகளுக்கான சினிமா படங்களை இயக்கப்போவது இல்லை. எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் நோய் இருப்பது நேற்று(அக்டோபர்29) தெரியவந்தது. நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை.

நான் பாடல் வீடியோக்களையும் குறும்படங்களையும் இயக்கி ஓடிடியில் வெளியிடுவதற்கு முயற்சி செய்வேன். ஏனென்றால் சினிமாவில் என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பவில்லை. உடல் பலவீனமாக இருக்கும் பொழுது வாழ்க்கை எதிர்பாரத திருப்பத்தை கொடுக்கின்றது” என்று அவர் அந்த போஸ்ட்டில் பதிவிட்டுள்ளார்.