சைபர் கிரைமானது பல்வேறு பண மோசடிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். காரணம் மோசடிக்காரர்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய வழிகளை கண்டுபிடித்து அதன் மூலம் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். அவ்வாறு தற்பொழுது புதிய முறை ஒன்றினை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பணத்தை திருடுவது குறித்து சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
Jumped Deposit மோசடி முறை குறித்த சைபர் பிரேம் போலீசார் தெரிவித்திருப்பது :-
ஜம்ப்ட் டெபாசிட் மோசடியின் கீழ் அதிகம் குறிவைக்கப்படுவது யுபிஐ (UPI) பயனர்கள் தான். அதாவது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் பயனர்கள் தான் – இந்த ஜம்ப்ட் டெபாசிட் மோசடிக்கான முக்கிய உள்ளது.
மோசடி செய்பவர் உங்கள் கணக்கிற்கு ஒரு உண்மையாகவே வைப்புத் தொகையாக 5000 ரூபாய் அனுப்புவார்கள்.ரூ.5000 டெபாசிட்டை செய்த உடனேயே, அவர்கள் உங்கள் அக்கவுண்டில் இருந்து அவர்களின் விவரங்களை பயன்படுத்தி பணத்தை திரும்ப பெறுவதற்கான வித்ட்ராவல் ரெக்வஸ்ட்டை (Withdrawal request) தொடங்குகிறார்கள்.
திடீரென ரூ.5000 பணம் வந்ததும், உங்களுடைய பேலன்ஸை சரிபார்த்து, அதற்காக உங்களுடைய பின் நம்பர் அல்லது செக்யூரிட்டி கோட்-ஐ பயன்படுத்தும் நேரத்தில், உங்களுக்கு தெரியாமலேயே வித்ட்ராவல் ரெக்வஸ்ட் அங்கீகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உங்கள் அக்க்வுண்டிற்கு திடீரென வந்த ரூ.5000 பணத்தோடு சேர்த்து, இன்னும் அதிக அளவிலான பணம் உங்கள் அக்கவுண்டில் இருந்து திருடப்படும்.
எனவே நீங்கள் எதிர்பாராத டெபாசிட் பணத்தை பெறும்போது, உடனே உங்கள் பேலன்ஸை சரிபார்க்க வேண்டாம். மாறாக குறைந்தபட்சம் 15 – 30 நிமிடங்கள் காத்திருக்கவும். ஏனெனில் இந்த நேரத்திற்குள் அங்கீகரிக்கப்படாத பணத்தை திரும்ப பெறுபவதற்கான கோரிக்கை காலாவதியாகி விடும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.