சந்தானம் ஜோடிக்கு திடீர்  நிச்சயதார்த்தம்!

Photo of author

By Parthipan K

சந்தானம் ஜோடிக்கு திடீர்  நிச்சயதார்த்தம்!

Parthipan K

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கில் முன்னணி காமெடி  நடிகையான வித்யுலேகா ராமன்  திருமண நிச்சயதார்த்தம் திடீரென்று நடந்தது. 

இவர்  நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இவர் நீண்ட நாட்களாக காதலித்த சஞ்சய் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினரின்  நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, வித்யுலேகா  ராமனின் நெருங்கிய உறவு என்பதால் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர்.

வித்யுலேகா பெரும்பாலும் சந்தானத்தின் ஜோடியாக பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். குறிப்பாக தீயா வேலை செய்யனும் குமாரு, நீதானே என் பொன்வசந்தம், விண்ணைத்தாண்டி வருவாயா என பல படங்களில் இவரது நடிப்பினால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பெருமைக்குரியவர்.

முன்னணி கதாநாயகிகளாக திரிஷா, ஹன்சிகா மோத்வானி, சமந்தா என பல  கதாநாயகிகளின் தோழியாக நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவரது நிச்சயதார்த்தத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக  பிரபலங்கள் பலரும்  தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.