கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் பெண்ணின் மேல் மர்ம நபர்கள் செய்த காரியம்!

Photo of author

By Rupa

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் பெண்ணின் மேல் மர்ம நபர்கள் செய்த காரியம்!

Rupa

Updated on:

The whole slum in Coimbatore? The industry that is going to meet the barrage!

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் பெண்ணின் மேல் மர்ம நபர்கள் செய்த காரியம்!

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் வன்கொடுமை நடந்து வருவது வழக்கமாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கோவையில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. கோவையில் திவ்யா வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவி தன்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் படிக்கும் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

தனியாக அறைக்கு அழைத்து அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். பிறகு இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அந்த மாணவியிடம் தெரிவித்துள்ளார். அந்த மாணவி தனது நெருங்கிய தோழனிடம் மட்டும் இதைப் பற்றிக் கூறியுள்ளார். பிறகு இந்த மாணவியின் தோழனும் ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்த மாணவி நடந்ததை மறக்க முடியாமல் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் கடிதம் எழுதிவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்தபடியாக இன்று நடந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.கோவை அம்மன் குளம் பகுதியை சேர்ந்தவர் ராதா. இவருக்கு 34 வயதாகிறது. இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இப்பெண்மணி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். பிறகு மர்ம நபர்கள் கையில் இருந்த ஆசிட்டை அப்பெண்மணி முகத்தில் வீசி உள்ளனர். பெண்மணி வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டு கீழே விழுந்தார்.

பின்பு அங்குள்ள அக்கம்பக்கத்தினர் அப்பெண்மணியை தூக்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்பொழுது ராதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆசிட் வீச்சுக்கு ராதாவின் கணவர் காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சில தினங்களாக ஆசிட் வீச்சு போன்ற பேச்சுக்கள் பேசப்படாமல் இருந்தது. தற்பொழுது மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. இச்சம்பவம் நடுரோட்டில் மக்கள் கூடும் இடத்தில் நடந்ததால் சம்பவம் நடைபெற்ற இடம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது.