இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! விமானியின் கவனத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு!

0
268
Sudden fire accident in Indigo flight! Avoid loss of life by the attention of the pilot!
Sudden fire accident in Indigo flight! Avoid loss of life by the attention of the pilot!

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! விமானியின் கவனத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு!

நேற்று இரவு டெல்லியில் இருந்து பெங்களூர்க்கு இண்டிகோ 6இ-2131 விமானம் புறப்பட்டது.அந்த விமானத்தில் மொத்தம் 184பேர் இருந்தனர் அதில் 177 பேர் பயணிகள் மற்றும் மீதமுள்ள 7 பேர் விமானப் பயணிகள் எனவும் கூறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே வலது என்ஜினில் தீப்பொறி கிளம்பியது.

அதனை கண்ட விமானி டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.அதனையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.மேலும் அப்போது விமான என்ஜின் முழுவதும் வேகமாக தீ பரவியது.

அந்நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் விமானியின் கவனத்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.அந்த தீ விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் இந்த தீ விபத்து குறித்து விமான போக்குவரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் விமான போக்குவரத்து இயக்குநரகம் டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளார்.மேலும் விபத்திற்குள்ளன விமானம் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது என விமான போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளர்.மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்காக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்! அத்துமீறல் செயலை எதிர்த்து போராட்டம்!
Next articleகுட் நியூஸ்: தொடர்ந்து மூன்றாவது நாளாக ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை! ரூ 480 குறைவு!