நள்ளிரவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! முக்கிய ஆவணங்கள் தீயில் சாம்பல்!

நள்ளிரவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! முக்கிய ஆவணங்கள் தீயில் சாம்பல்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் சந்தேக பட செய்துள்ளது.கும்மிடிபூண்டி பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் ஒன்று உள்ளது.அங்கு நேற்று இரவு திடீரென்று தீ பிடித்து எறிய ஆரம்பித்தது.அங்குள்ள பணியாளர்கள் திடீரென்று அலுவலகத்தில் தீ பிடித்ததால் தெய்வதெரியாது திகைத்து நின்றனர்.கும்மமிடிப்பூண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் அங்குள்ள கிராம மக்கள் அவ்வபோது அவர்கள் தேவைக்காக வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதேபோல வெள்ளிகிழமை அன்றும் பணி புரிபவர்கள் மற்றும் அங்கு செல்லுபவர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர்.இருவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்தனர்.அவ்வாறு இருக்கும் போது நள்ளிரவு 1 மணியளவில் திடீரென்று அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்தது.குறிப்பாக பிற அதிகாரிகள் வேலை செய்யும் இடத்தில் தீ பிடித்தது.உறகத்தில் இருந்த பாதுகாவலர் அலுவலகத்தில் மற்ற பகுதியிலிருந்து புகை வருவதை கண்டு சென்று பார்த்துள்ளார்.அவர் சென்று பார்பதற்குள் தீ மளமளவென பரவ தொடங்கியது.

இதுகுறித்து உடனடியாக வட்டாட்சியர் ந.மகேஷ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனையடுத்து வட்டாட்சியர் சிப்காட் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.அதனையடுத்து தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயை அனைத்தனர்.இந்த தீ விபத்தால் 6 கணினிகள் ஆறு மேசைகள் நாற்காலிகள் மற்றும் அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது.தீ விபத்து நடந்ததை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இந்த தீ விபத்து வேறேதும் காரணங்களால் நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி இந்த தீ விபத்தானது மின் கசிவினால் நடைபெற்றது என்று கூறினர்.தற்பொழுது அங்குள்ள முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இந்த தீ விபத்தினால் எரிந்து சாம்பலானது என கூறினர்.அதுமட்டுமின்றி அந்த நேரத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.நள்ளிரவில் நடைபெற்ற தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Leave a Comment