திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை!
பிரபல நடிகையான இலியானா திடீர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பின்னர் ஷங்கரின் நண்பன் படத்தில் இளைய தளபதி விஜயுடன் நடித்த மிகவும் பிரபலமானார். மேலும் தெலுங்கு, ஹிந்தி ஆகியவற்றில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு பெயர் பெற்றவரான நடிகை இலியானா திடீரென உடல் எடை அதிகமாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இலியானாவும் ஒருவர். அடிக்கடி தனது போட்டோசூட், புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார். மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் ஆலோசனை கூறுவதும் என கலந்துரையாடலில் பங்குபெறுவார்.
தற்போது இலியானா Unfair & Lovely என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐவி திரவம் மூலம் சிகிச்சை பெற்றதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். மூன்று ஐவி திரவ பாட்டில்கள் ஏற்றப்பட்டதாகவும், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் இலியானா கூறியுள்ளார்.
மேலும் தனது உடல்நிலை குறித்து விசாரிக்க குறுஞ்செய்திகள் அனுப்பும் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், தற்போது குணமாகி நல்ல நிலைமையில் இருப்பதாகவும் இலியானா அந்தப் பதிவில் கூறியுள்ளார். இலியானா தனக்கு என்ன நோய் என்று கூறாத நிலையில் புட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.