ஆவின் பால் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!
கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனம் தற்பொழுது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பால் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் பாலின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்று வருகிறது.
இதர நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளின் விலையை காட்டிலும் ஆவின் நிறுவனம் குறைந்த விலைக்கு பாலை விற்பனை செய்து வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 37 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் ஆவின் நிறுவனம் மாதாந்திர பால் அட்டை மூலம் 5 லட்சம் பேருக்கு பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. நீலம், பச்சை, ஆரஞ்சு, பிங்க் என்று 4 நிறங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கிடைக்கிறது.
இந்நிலையில் பெரும்பாலான மக்கள் வாங்கி பயன்படுத்தும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளில் 5 லிட்டர் எடை கொண்ட பாக்கெட்டுகளின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 10 அதிகரித்து ரூ.220 என்று விற்பனையானது.
இந்நிலையில் தற்பொழுது அனைத்து ஆவின் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது. அதன்படி 200 மில்லி அளவு கொண்ட பால் பாக்கெட்டுகள் ரூ.50
காசுகள் விலை உயர்ந்து விறக்கப்படுகிறது.
ஏற்கனவே பிங்க் நிறத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டுகளை மஞ்சள் நிறத்தில் மாற்ற ஆவின் நிறுவனம் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் 200 மில்லி ஆரஞ்சு நிற பால் பாக்கெட் இனி வரும் காலங்களில் வைலெட் நிறத்தில் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மற்ற நிறுவனங்களின் பால் விலையை காட்டிலும் ஆவின் நிறுவனத்தின் பால் விலை மலிவு என்ற காரணத்தினால் மக்கள் அதை வாங்கி உபயோகிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது அதன் விலை ஏற்றம் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.