விக்கிரவாண்டி தொகுதியில் கேட்ட திடீர் அலறல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வாக்குச்சாவடி!! பொதுமக்கள் தொடர் பரபரப்பு!!
விக்கிரவாண்டி தேர்தலில் திமுக பாமக நாதக என மும்முனை போட்டி நிலவிய பட்சத்தில் இன்று வாக்குப்பதிவானது காலையிலேயே தொடங்கியது. குறிப்பாக அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில் இவர்களது வாக்கு வாங்கி யாருக்கு செல்லும் என்ற பெரும் கேள்வியும் இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் வாக்கு சதவீதத்தை குறைக்கும் வகையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு என அடுத்தடுத்து நடந்த வண்ணமாகவே இருந்தது. இதனால் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்து விட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
தற்பொழுது காலை 6:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. இதில் தனது வாக்கை செலுத்த வந்த பெண் ஒருவரை மர்ம நபர் திடீரென்று கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் விக்கிரவாண்டி தொகுதி சற்று பரபரப்பாக காணப்படுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் கொசப்பாளையம் மையத்தில் வாக்களிப்பதற்காக கனிமொழி என்ற பெண்மணி வந்துள்ளார். அவர் வாக்களிக்க செல்லும் பொழுது திடீரென்று மர்ம நம்பர் ஒருவர் கத்தியால் குத்தி விட்டு ஓட முயன்றுள்ளார்.
அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவரும் அவரை பிடித்தனர். பின்பு போலீசார் விசாரணை செய்ததில் குத்திய நபர் பெண்மணியின் முன்னாள் கணவர் என்பது தெரிய வந்துள்ளது. முன் விரோத காரணமாக இவ்வாறன தாக்குதலை நடத்தியதாகவும் கூறுகின்றனர். இடைத்தேர்தலில் கூட பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை என அத்தொகுதி மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.இது அனைத்தும் முறையற்ற ஆட்சி என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.