இராணுவம் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு!! பொதுமக்கள் 114 பேர் பலி!! அச்சத்தில் பொதுமக்கள்!!
மியன்மாரில் இராணுவத்தினர் நடத்திய திடீர் துப்பக்கி சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்கா உள்பட 12 உலக நாடுகளின் பாதுகாப்புதுறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்கள். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குழந்தைகள் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பிப்ரவரி முதல் நாள் இராணுவம் வீழ்த்தது. முந்தய ஆட்சியாளகள் அனைவரையும் வீட்டு சிரையில் அடைத்தது வைகப்படிருன்தனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்துபவகள் மீது துப்பாக்கி சூடு அடிதடி போன்ற கடுமையான தண்டனைகளை இராணுவம் கையாண்டு வருகின்றது. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு தேசிய ஆயுத படை நாளையொட்டி மியான்மரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 114 பேர் பலியாகி உள்ளனர். பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மியான்மர் இராணுவ ஆட்சியின் மீது அமெரிக்க, பிரிடன், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளீட்ட 12 நாடுகளின் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்களில் இதுவரை 400 பேருக்கும் மேல் இறந்தள்ளனர்.