அதிமுக அமைச்சர் விஜய் க்கு திடீர் ஆதரவு!! பாசிசம் பாயசாமா குறித்து பேசியது சரிதான்!!

Photo of author

By Vijay

அதிமுக அமைச்சர் விஜய் க்கு திடீர் ஆதரவு!! பாசிசம் பாயசாமா குறித்து பேசியது சரிதான்!!

Vijay

Sudden support for AIADMK minister Vijay

politics: பாசிசம் குறித்து விஜய் எழுப்பிய கேள்வி சரியான ஒரு கேள்விதான் அதிமுக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசிய அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா என கேள்வி எழுப்பியது சரியான ஒரு கேள்விதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 117 வது ஜெயந்தி விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை  செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் பந்தயம் வைக்க அவரது தந்தைக்கு பேனா சிலை வைக்க நிதி இருக்கும்போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த நிதி இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர் அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா என்று விஜ எழுப்பிய கேள்வி சரியான ஒன்றுதான் மத்திய அரசின் செயல்பாடு போன்றுதான் திமுக அரசின் செயல்பாடு உள்ளது, திமுக அரசும் பாசிச முறையை தான் கையில் எடுத்துள்ளது. எனவே அவர் இவ்வாறு கூறியதில் எந்த தவறும் இல்லை என்று கூறினர்