அமலாக்கத்துறை கடந்த இரண்டு வார காலமாக தமிழகத்தின் டாஸ்மாக் தலைமை என தொடங்கி அதன் நிர்வாகிகள் வரை பலரது வீடுகளிலும் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு பின்னணியில், தனியார் மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில் குளறுபடி நடப்பதாக புகார் வந்ததையடுத்து இதன் சோதனை ஆரம்பித்துள்ளது. அதன் இறுதி கட்டத்தில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேல் தமிழக அரசு ஏமாற்றியுள்ளதாக திடுக்கிடும் அறிக்கையை ED வெளியிட்டுள்ளது.
இது ரீதியாக தமிழக அரசை கண்டித்து, சென்னை தலைமையில் பாஜகவும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் தற்பொழுது தமிழக அரசு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக, மாநில அரசினுடைய அனுமதியின்றி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும். இரண்டாவதாக, விசாரணை என ஆரம்பித்து இதில் டாஸ்மாக் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஊழியர்கள் என பலரையும் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் அதனையும் தடை விதிக்க வேண்டும்.
மூன்றாவதாக, சோதனை செய்யும் போது பல்வேறு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்படுகிறது அப்படி பறிமுதல் செய்யப்படுவதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இப்படி தமிழக அரசு சார்பாக டாஸ்மாக் ரீதியான மனு தாக்கலானது இவர்கள் குற்றம் செய்துள்ளனர் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. இது ரீதியாக நீதிமன்றம் கொடுக்கப் போகும் உத்தரவு பொறுத்து தான் அமலாக்க துறையின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.