சட்டென்று குறைந்த தங்கம் விலை! நகை பிரியர்கள் கொஞ்சம் ஹேப்பி! 

0
348
Suddenly low gold prices! Jewelry lovers are a little happy!
Suddenly low gold prices! Jewelry lovers are a little happy!
சட்டென்று குறைந்த தங்கம் விலை! நகை பிரியர்கள் கொஞ்சம் ஹேப்பி!
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று(ஏப்ரல்15) சற்று குறைந்ததால் நகைப் பிரியர்கள் சற்று நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
கடந்த 15 நாட்களாகவே தங்கத்தின் விலை தொடக்கூடாத புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 50000 ரூபாயை தொட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாள் தங்கத்தின். விலை உயர்ந்து ஏப்ரல் 12ம் தேதி 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 54440 ரூபாயை தொட்டது.
இதையடுத்து இன்று(ஏப்ரல்15) தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது தங்கத்தின் விலை இன்று(ஏப்ரல்15) 520 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 54320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6790 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 89500 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து 89.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதே போல ஒரு கிராம் தங்க நாணயம் 6890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Previous articleதமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..??
Next articleநாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் விஜய்.. சாட்டை துரை முருகன் கூறுவது என்ன..??