நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் விஜய்.. சாட்டை துரை முருகன் கூறுவது என்ன..?? 

0
160
Vijay who gives indirect support to Naam Tamilar Party.. What is Chattai Durai Murugan saying..??
Vijay who gives indirect support to Naam Tamilar Party.. What is Chattai Durai Murugan saying..??

நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் விஜய்.. சாட்டை துரை முருகன் கூறுவது என்ன..?? 

பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இந்த தேர்தலில் போட்டியும் இல்லை யாருக்கும் ஆதரவும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவளித்துள்ளார் என்று சாட்டை துரை முருகன் கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “தமிழக வெற்றிக் கழக தலைவர் நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவளித்துள்ளார். அவர் நடித்துள்ள கோட் படத்தின் பாடல் நேற்று வெளியானது. அதில், ஒரு காட்சி ஒன்றில் மைக் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அந்த காட்சியில் மைக்கை வைத்துள்ளார்கள். 

இதனை மைக் சின்னத்தை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் மறைமுக ஆதரவாகவே நாங்கள் பார்க்கிறோம். விஜய் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இருப்பினும் மைக் சின்னத்தை வைத்தால் அது நாம் தமிழர் கட்சியை தான் சென்றடையும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்” என கூறியுள்ளார்.

மேலும், “சீமான் மற்றும் விஜய் ஆகிய இருவரின் கொள்கைகளிலுன் பெரிய வித்தியாசம் இல்லை. நாங்களும் அடிப்படை அரசியல் மாற்றம் என்று சொன்னோம் விஜய்யும் அவரின் கொள்கையில் அதையே தான் கூறினார். எனவே விஜய்யின் அரசியல் வருகையை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்” என கூறியுள்ளார். இப்போது வரை இவரின் இந்த கருத்திற்கு விஜய்யின் தவெக சார்பாக எந்த மறுப்பும் ஆதரவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.