சளி காய்ச்சலால் அவதியா? இதோ கிராம்பை இப்படி யூஸ் பண்ணுங்க!!
இரவு தூங்கச் செல்லும் முன்பு கிராம்பு இரண்டை சாப்பிட்டு தூங்கினால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை இது தருகின்றது. வாய் துர்நாற்றம் முதல் கோடி ரூபாய் செலவு செய்தாலும் தீராத நோய்களைக் கூட இந்த கிராம்பு(இலவங்கம்) சரி செய்கின்றது. அவ்வாறு கிராம்பு நம் உடலுக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கின்றது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
* இந்த கிராம்பில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனிஸ், கார்போ ஹைட்ரேட், ஹைட்ரோ குளோரிக் அமிலம், விட்டமின் சி, ஏ போன்று நிறைய சத்துக்கள் உள்ளன.
* சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இந்த கிராம்பை உட்கொண்டால் அந்த நோய் குணமாகின்றது. மேலும் நுரையீரல் புற்று நோயிலிருந்து விடுபட கிராம்பு உதவுகின்றது.
* சிலருக்கு தொலைதூர பயணம் செய்யும் பொழுது வாந்தி வரும். அந்த சமயம் பயணம் செய்வதற்கு முன்பு இரண்டு கிராம்பு எடுத்து சாப்பிட்டு அதன் பிறகு பயணம் செய்தால் வாந்தி பிரச்சனை இருக்காது.
* நிறைய பேருக்கு தீராத வேதனை என்னவென்றால் சளி, காய்ச்சல் இந்த நோய்கள் தான். சளி, காய்ச்சல் இருக்கும் பொழுது மூன்று கிராம்பிலிருந்து நான்கு கிராம்புகள் உட்கொண்டால் சளி, காய்ச்சல் தொந்தரவு இருக்காது.
* தொடர்ந்து தலைவலியால் அவதிப்படுபவர்கள் இந்த கிராம்பை சாப்பிட்டால் தலைவலி பிரச்சனை இருக்காது. அது மட்டுமில்லாமல் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்களைக் கூட இது கட்டுப்படுத்துகின்றது.
* சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக அமையும் இந்த கிராம்பு நம் உடலுக்கு தேவையான நோயெதிர்ப்புச் சக்தியையும் தருகின்றது.
* கிராம்பில் ஆன்டி பாக்டீரியல் குணங்கள் உள்ளது. இது நம் உடலை கிருமிகள் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றது.
* கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கல்லீரலை சுத்தப் படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் கிராம்பு நம் உடலில் பெட்டாபலிசத்தை அதிகப்படுத்தி கொழுப்பை குறைக்கின்றது. மேலும் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. இதனால் இதயம் தொடர்பான நோய்கள் வராது.
* கிராம்பில் உள்ள ப்ளவனாய்டுகள் எலும்பிற்கு நல்ல பலத்தை கொடுக்கின்றது. முழங்கால் வலி, மூட்டு வலி உள்ளவர்களுக்கும் இந்த கிராம்பு நல்ல தீர்வாக அமையும்.
மேலும் எலும்பில் உள்ள ஜவ்வு தேய்வதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாக கிராம்பு அமைகின்றது. கிராம்பில் உள்ள மாங்கனிஸ் நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கின்றது.
கிராம்பில் உள்ள யூஜனால் எனப்படும் ஆயில் எலும்புகள் பலமாக இருக்க உதவுகின்றது.
* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதங்களில் வாந்தி எடுத்து அவதிப்படுவார்கள். மேலும் சோர்வாக இருப்பார்கள். அவர்கள் கிராம்பினை எடுத்துக் கொண்டால் இந்த பிரச்சனை எதுவும் இருக்காது.
* கிராம்பினை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் வாயுத் தொல்லை, அஜீரணம், அசிடிட்டி, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருக்காது.
* கிராம்பில் ஆன்டி இன்புளன்ட்ரி குணங்கள் அதிகம் இருக்கின்றது. இது நம் உடலில் ஏற்படும் வலி, வீக்கம் போன்றவற்றை குறைக்கின்றது. நம் உடலில் நீர் சேராமல் இருக்கவும் கிராம்பு உதவுகின்றது.
* நிறைய விதமான பற்பசைகளில்( டூத் பேஸ்ட்) கிராம்பு சேர்க்கப்படுகின்றது. கிராம்பினை சாப்பிடுவதால் பல் வலி, பற்களின் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைகின்றது.
* பாலில் ஒரு சிட்டிகை கிராம்புப் பொடியை கலந்து குடிப்பதால் எந்த வகையான தலைவலியாக இருந்தாலும் அது குணமடைகின்றது. இந்த கிராம்பில் உள்ள யூஜ்னால் அயில் கவம், சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கின்றது.
* இந்த கிராம்பினை நீங்கள் தண்ணீரில் பேட்டு அந்த தண்ணீரால் வாய் கொப்பளித்தால் தொண்டை வலி, தொண்டை புண், தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றது. முழங்கால் வலி, மூட்டு வலி உள்ளவர்கள் கிராம்பு கஷாயம் எடுத்துக் கொண்டால் நல்ல பலனை தரும்.