குதிகால் வெடிப்பு மற்றும் வலியால் அவஸ்தையா? உடனே சரியாக இதை பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

குதிகால் வெடிப்பு மற்றும் வலியால் அவஸ்தையா? உடனே சரியாக இதை பாலோ பண்ணுங்க!!

நாம் நம்முடைய முகத்தை கவனித்துக் கொள்ள காட்டும் அக்கறையை கால் பாதங்களுக்கு காட்ட வேண்டும்.சிலருக்கு முகம் பார்க்க அழகாக இருக்கும்.ஆனால் கால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு பாத அழகை கெடுக்கும் வகையில் இருக்கும்.

மேலும் பாத வெடிப்பால் அரிப்பு,எரிச்சல்,புண் உள்ளிட்டவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் அதை குணமாக்க நேரம் ஒதுக்க வேண்டும்.குதிகாலில் வெடிப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள் காலணிகள் அணியாமல் இருத்தல்,நீண்ட நேரம் தண்ணீரில் நின்றபடி வேலை செய்தல்,பனி மற்றும் மழை போன்றவை ஆகும்.

குதிகால் வலிக்கு இயற்கை வழிகள் இதோ:

1)அரிசி மாவு
2)தேன்
3)வினிகர்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு,1/4 தேக்கரண்டி தேன் மற்றும் 2 தேக்கரண்டி வினிகர் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி கால்களை 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.பின்னர் துடைத்து விட்டு தயாரித்து வைத்துள்ள பேஸ்டை குதிகால்களுக்கு அப்ளை செய்து ஒரு நன்கு ஸ்க்ரப் செய்யவும்.

பின்னர் வெந்நீர் கொண்டு காலை சுத்தம் செய்யவும்.இவ்வாறு தினமும் இரவு நேரத்தில் செய்து வந்தால் குதிகால் வெடிப்பு முழுமையாக மறைந்து விடும்.

1)தேங்காய் எண்ணெய்
2)நல்லெண்ணெய்
3)மஞ்சள் தூள்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்,1/4 தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து லேசாக சூடுபடுத்தவும்.பிறகு இதை குதிகால்களில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்து வந்தால் குதிகால் வெடிப்பு முழுமையாக குணமாகி விடும்.

1)எலுமிச்சை சாறு
2)வாசலின்

ஒரு தேக்கரண்டி வாசலினில் 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.இதை குதிகாலில் அப்ளை செய்து எலுமிச்சை தோல் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யவும்.பின்னர் வெந்நீர் கொண்டு கால்களை கழுவி சுத்தம் செய்யவும்.