நாவில் ஊரும் அதிகப்படியான உமிழ்நீரால் அவதியா? இதை கட்டுப்படுத்தும் சிறந்த வழிகள் இதோ!!
உங்கள் வாயின் உதடுகளுக்குள் இருந்து உற்பத்தியாகும் உமிழ் நீரில் வைட்டமின்கள்,மினரல்கள்,நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் அமிலங்கள் நிறைந்திருக்கிறது.இந்த உமிழ்நீர் நம் உடலில் மகத்தான வேலைகளை செய்கிறது.நாம் உண்ணும் உணவை செரிக்க வைக்க உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் உதவுகிறது.
உமிழ்நீர் நம் வாயில் ஏற்படக் கூடிய வறட்சியை தடுக்க உதவுகிறது.இந்நிலையில் அதிகளவு உமிழ்நீர் சுரந்தால் அவை நாம் பேசுவது,சாப்பிடுவது,உறங்குவது போன்ற செயல்களுக்கு இடையூறாக இருக்கும்.வாயில் உள்ள ஹைபர் சலைவேஷனால் அதிகப்படியான உமிழ்நீர் உருவாகிறது.
இதனால் உதடு பிளவு,இரைப்பை குடல் அலர்ஜி,வாய்ப்புண்,கல்லீரல் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பதற்கான காரணங்கள்:
1)அதிகளவு மருந்து உட்கொள்ளுதல்
2)மனச்சோர்வு
3)இடைவிடாத நோய் பாதிப்பு
வாயில் சுரக்கும் அதிகப்படியான உமிழ்நீரை கட்டுப்படுத்துவது எப்படி?
தீர்வு 01:-
*இலவங்கம்
தினமும் இரண்டு இலவங்கத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பதை தடுக்க முடியும்.
தீர்வு 02:-
*தண்ணீர்
தினமும் அதிகளவு தண்ணீர் குடிப்பதினால் வாயில் ஊரும் அதிகப்படியான உமிழ்நீர் பிரச்சனைகள தீர்வு கிடைக்கும்.
தீர்வு 03:-
*மௌத்வாஷ்
பற்களை துலக்கிய பின்னர் மௌத்வாஷ் பயன்படுத்தி வாயை சுத்தம் செய்து வந்தால் உமிழ்நீர் சுரப்பதை தடுக்க முடியும்.
தீர்வு 04:-
அதிக ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்கவும்.ஏனெனில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரக்க வைக்கும்.