வயதான பிறகு ஞாபக மறதி ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.ஆனால் அவை அதிகமானால் ஒரு நோயாக மாறி சிரமங்களை ஏற்படுத்தும்.எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை உணவாக எடுத்துக் கொண்டால் ஞாபக மறதி குறையும்.
1)அஸ்வகந்தா பொடி – 20 கிராம்
2)கெட்டி பால் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
அஸ்வகந்தா பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கி 5 நாட்கள் வரை வைத்து பயன்படுத்திக் கொள்ளவும்.
அஸ்வகந்தா கிழங்கு இருந்தால் அதை அரைத்து பொடி செய்து பயன்படுத்தலாம்.முதலில் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் சேர்க்காத பால் ஒரு கிளாஸ் ஊற்றிக் கொள்ளவும்.
பிறகு அதை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.பால் பச்சை வாடை நீங்கியதும் ஒரு கிளாஸிற்கு வடிகட்டி 20 கிராம் அளவிற்கு அஸ்வகந்தா பொடி சேர்த்து கலக்கவும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.இதனால் ஞாபக மறதி பிரச்சனை சரியாகும்.
1)சங்கு புஷ்பம் – இரண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் இரண்டு சங்கு புஷ்பம் போட்டு கொதிக்கவிடவும்.பின்னர் இதை வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் ஞாபக மறதி பாதிப்பு குறையும்.
1)துளசி – 10 இலைகள்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி 10 துளசி இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும்.பிறகு இதை வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூளை நரம்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது.
1)க்ரீன் டீ பேக்
2)தண்ணீர்
ஒரு கிளாஸில் சூடான நீர் ஊற்றி க்ரீன் டீ பேக்கை போட்டு பருகினால் மூளையின் செயல்பாடு மேம்படும்.க்ரீன் டீ பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும்.அதேபோல் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.