அடிக்கடி ஏற்படும் தும்மலால் அவதியா? இதை நிறுத்த ஈஸியான இயற்கை வழிகள் இதோ!!

Photo of author

By Divya

அடிக்கடி ஏற்படும் தும்மலால் அவதியா? இதை நிறுத்த ஈஸியான இயற்கை வழிகள் இதோ!!

தும்மல் வருவது பொதுவான ஒன்று தான்.சளி பிடித்தல்,கார உணவு பொருட்களின் வாசனை,நாசியில் தூசு புகுதல் போன்ற பல காரணங்களால் தும்மல் ஏற்படுகிறது.ஆனால் சிலருக்கு கட்டுப்படுத்த முடியதா அளவிற்கு தும்மல் வந்து கொண்டே இருக்கும்.

தும்புவதால் நாசிக்குள் இருக்கும் அழுக்குகள் வெளியேறும்.தும்மல் நல்லது என்றாலும் அவை அடிக்கடி ஏற்பட்டால் தும்மியே களைத்து விடுவோம்.

தும்மல் வரக் காரணம்:-

1)நாசியில் தூசி புகுந்தால் தும்மல் ஏற்படும்.

2)செல்லப்பிராணிகளை தொடுவதால் சிலருக்கு தும்மல் ஏற்படும்.

3)வாசனை திரவியங்கள்,மிளகாய்,மிளகு போன்ற காரமான உணவு பொருட்களால் தும்மல் ஏற்படும்.

4)ஜலதோஷம் பிடித்தால் தும்மல் ஏற்படும்.ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களுக்கு தும்மல் ஏற்படும்.

அடிக்கடி ஏற்படும் தும்மலை சரி செய்வது எப்படி?

தீர்வு 01:

மூலிகை நீராவி பிடித்தல்

1)துளசி
2)கற்பூரவல்லி
3)விக்ஸ் வேப்பரப்
4)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் சூடான நீர் ஊற்றி 5 துளசி இலை,3 கற்பூரவல்லி இலை,ஒரு தேக்கரண்டி விக்ஸ் வேப்பரப் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு இந்த நீரை ஆவி பிடித்தால் மூக்கில் அடைப்பட்டு கிடந்த தூசுகள் வெளியேறி தும்மல் ஏற்படுவது நிற்கும்.

தீர்வு 02:-

1)ஆரஞ்சு பழ சாறு
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு ஆரஞ்சு பழத்தை இரண்டாக நறுக்கி அதன் விதையை நீக்கி விடவும்.பின்னர் அதன் சாற்றை ஒரு கிளாஸிற்கு பிழிந்து ஒரு கிளாஸ் நீர் ஊற்றி கலந்து விடவும்.இந்த நீரை குடிப்பதால் அடிக்கடி தும்மல் ஏற்படாமல் இருக்கும்.

தீர்வு 03:-

1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்

ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் அடிக்கடி தும்மல் வருவது நிற்கும்.