கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!!

Photo of author

By CineDesk

கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!!

உங்களுக்கு அடிக்கடி அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டால், காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அதிகப்படியான மிளகாய் மசாலாக்கள் பெரும்பாலும் அசிடிட்டியை தூண்டும். உங்கள் உணவில் இருந்து மிளகாய் தூள், வர மிளகாய், மிளகாய் சாஸ் போன்றவற்றை நீக்குவது நல்லது.

உடம்பில் ஏற்படக்கூடிய கேஸ் பிரச்சனை மற்றும் மலச்சிக்கலுக்கு ஏற்ற ஒரு வீட்டு வைத்தியத்தைப் பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை
எலுமிச்சை
இஞ்சி துண்டு
சோம்பு

செய்முறை:
ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி சோம்பை சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு சிறிது சிறிதாக கட் செய்து வைத்த கறிவேப்பிலை இலையை சேர்த்துக் கொள்ளவும்.
மேலும் அதில் சிறு துண்டு இஞ்சி தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

இதையெல்லாம் ஒன்றாக கலந்து விட்டு ஒரு இரவு முழுவதும் மூடி வைக்கவும்.காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்கி விட்டு இந்த தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு பருகவும் மற்றும் இதனுடன் சிறிது எலுமிச்சையை பிழிந்து விட்டு குடிக்கவும்.

இந்த கசாயத்தை குடித்து வந்தால் மலச்சிக்கல், கேஸ் பிரச்சனை, மேலும் எடை குறைவிற்கு கூட மிகுந்த உதவியாக இருக்கும்.