கேஸ்ட்ரிக் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ சோம்பை இப்படி ட்ரை உட்கொள்ளுங்கள்!

Photo of author

By Divya

கேஸ்ட்ரிக் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ சோம்பை இப்படி ட்ரை உட்கொள்ளுங்கள்!

Divya

Suffering from gastric problems? So consume zombie dry like this!

கேஸ்ட்ரிக் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ சோம்பை இப்படி ட்ரை உட்கொள்ளுங்கள்!

வயிறு தொடர்பான பாதிப்புகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.சாப்பிட உணவு செரிக்காமை,வயிறு உப்பசம்,வயிற்று வலி,வாயுக்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை வீட்டு சமயலறையில் உள்ள பொருட்கள் மருந்தாக செயல்படும்.

சோம்பு செரிமான பிரச்சனையை சரி செய்யக் கூடியது.ஓமம் வாயுத் தொல்லையை போக்க கூடியது.அதேபோல் சீரகம் வயிறு உப்பசம்,வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க கூடிய மூலிகை.இதை அனைத்தையும் வறுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் நீங்கும்.

இதை பால் அல்லது நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தாலும் முழு பலன் கிடைக்கும்.சோம்பு உடல் சூட்டை குறைக்க கூடிய பொருள்.எனவே வெயில் காலத்தில் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி அளவு சோம்பு சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)சோம்பு
2)ஓமம்
3)சீரகம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து 1 நிமிடம் வறுத்து எடுக்கவும்.இதை ஒரு தட்டிற்கு கொட்டி வைக்கவும்.

அதேபோல் ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைத்து விடவும்.

இந்த மூன்று பொருட்களையும் நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த பொடியை காலை உணவு உட்கொள்வதற்கு முன் ஒரு தேக்கரண்டி மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்கள் முழுமையாக வெளியேறி விடும்.